ஆரவ் நாயகனாக நடிக்கும் புதிய படம்: 'சிலம்பாட்டம்' சரவணன் இயக்குகிறார்


'சிலம்பாட்டம்' இயக்குநர் சரவணனின் புதிய படத்தில் ஆரவ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.பிக் பாஸ் போட்டியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதற்குப் பிறகு நாயகனாக தான் நடிக்க உள்ளதாகவும், அடுத்த 10 நாட்களுக்குள், பிக்பாஸுக்குப் பிறகான எனது முதல் படத்தைப் பற்றி அறிவிக்கவுள்ளேன். இப்போதே அது குறித்து பேச ஆர்வமாக இருக்கிறேன். கூடிய விரைவில் சொல்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'சிலம்பாட்டம்' இயக்குநர் சரவணன் இயக்கும் புதிய படத்தில் ஆரவ் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய் பார்கவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. நாயகி, படக்குழு குறித்த மற்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.சரவணன் இயக்கத்தில் தான் நடிப்பது குறித்த தகவலை ஆரவ் தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
'சைத்தான்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்திருந்தார். தற்போது ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.