நீட் பயிற்சி மையங்களுக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும்: அரவிந்த்சாமி


நீட் பயிற்சி மையங்களுக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அரவிந்த்சாமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அதற்கான ஆயுத்த வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.இப்பயிற்சி வகுப்புகள் குறித்து அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இறுதியாக, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்துகொண்டேன். நீட் பயிற்சி மையங்களுக்கு அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என விரும்புகிறேன்.நீட் விவாதங்கள் ஒருபுறம் தொடரட்டும். அதேவேளையில் நீட் தேர்வு இப்போதைக்கு கட்டாயம் என்ற சூழல் இருப்பதால் இத்தகைய பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.