டிசம்பர் 12ல் தனிக் கட்சி தொடங்குகிறார் ரஜினி !நடிகர் ரஜினி காந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12ல் தனிக்கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 1996ல் இருந்து ரஜினியும் அரசியலும் பிரிக்க முடியாதது ஆகிவிட்டது. அவ்வப்போது ஒரு சில அரசியல் காட்சிகளை ஆதரித்தது வாய்ஸ் கொடுப்பார்.

அவரது ரசிகர்களும் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து வந்தனர் . இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்திந்தார். அப்போது  ரசிகர்களிடம் போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார் . அது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரது அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்நிலையில் தான் ரஜினி டிசம்பர் 12ல் தனிக் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.