விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்தில் 12 பாடல்கள்இயக்குனர் விஜய் கரு படத்தை முடித்து அதன் ட்ரைலரை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படம் நடனம் தொடர்பான படம் என்பதால் இந்த படத்தில் 12 பாடல்களை வைத்து உருவாக்க உள்ளார் விஜய்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கருணாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.