நடன இயக்குநர்கள் சங்கத்துக்கு விஜய் 15 லட்சம் நன்கொடை
விஜய் நடித்து அட்லீ  இயக்கத்தில்  வெளியான 'மெர்சல்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி படத்திற்கு வந்த எதிர்ப்புகள், படத்தை  மேலும் விளம்பரப்படுத்தியது. இதனால் படத்தின் வசூல் இரட்டிப்பானது. இதனால் தயாரிப்பு நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

ஒரு படம் வெளியானப் பிறகு, சினிமா துறையைச் சேர்ந்த ஒரு சங்கத்திற்கு நன்கொடை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது 'மெர்சல்' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நடன இயக்குநர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 15 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார் விஜய்.