கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது



சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா மற்றும் சந்தானம்  நடித்த கலகலப்பு படம் பெரும் வெற்றி பெற்றது. இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தது வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தை நடிகை குஷ்பு தயாரிக்கிறார்.

தற்போது காசியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வரும் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

விரைவில் இதன் இறுதிக்கட்ட பணிகளை முடித்து பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன் பிறகு சங்கமித்ரா படத்தை இயக்கம் வேளைகளில் ஈடுபட உள்ளார் சுந்தர்.சி