தோனியை டி20 அணியிலிருந்து நீக்க வேண்டும் - முன்னாள் வீரர் கருத்து


தோனியின் சமீபகால பேட்டிங் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஜித் அகார்கர், விவிஎஸ்.லஷ்மண் ஆகியோர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தோனிக்குப் பதிலாக வேறு இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் முன்னாள் வீரர் ஒருவர் தோனியை நீக்க வேண்டும் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தோனியை இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஐபிடைம்ஸ் இணையதளத்தில் கூறியிருக்கிறார். அவர் கூறியது :

இந்தியா, நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான தொடர் வருகிறது. இலங்கை அணி வலுவிழந்த நிலையில் இருப்பதால் வேறு வீரர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்க்கலாம்.தோனி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திணறி வருகிறார். அவரது பேட்டிங் குறுகிப்போய் விட்டது. எனவே புதிய வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்படிப்பட்ட நேரம் கனிந்திருப்பதாகவே கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.