2.0 டீசர் வெளியீட்டு விழா தள்ளிவைப்பு


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், 3டி கேமிராவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட படம் என்பதால், இதற்கு கிராபிக்ஸ் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. 

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் வெளியீடு ஜனவரி 26 என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற இருந்த டீசர் வெளியீட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இன்னும்  கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.