2.0 படத்தின் இணையதள உரிமையை வாங்கியது அமேசான்


ரஜினி மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் 2.0. 2010 ஆம் ஆண்டு வந்த எந்திரன் படத்தை போன்று ரோபோவை கதைக்களமாக கொண்ட படம். இந்தியாவிலேயே அதிக செலவில் உருவாகும் படம்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் துபாயில் நடைபெற்றது. இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் படத்தின் இணையதள உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது .

எமி ஜாக்ஸ்ன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது