இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பு நிறுத்தம். என்ன காரணம் ?



நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்து சிம்புதேவன் இயக்கிய படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். 

இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்குகிறார் சிம்புதேவன். மீண்டும் இயக்குனர் ஷங்கர் தயாரிக்கிறார்.  அந்த படத்திற்கு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்று பெயர் சூட்டியுள்ளனர்.

படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருந்தா நிலையில் வடிவேலுவின் ஆடை வடிவமைப்பாளரை நீக்குவது என்று முடிவெடுத்து வடிவேலுவின் ஒப்புதலோடு நீக்கி விட்டனர். அனால் வடிவேலு மீண்டும் அதே ஆடை வடிவமைப்பாளர் தான் வேண்டும் என்று கேட்பதால் படப்பிடிப்பு பாத்தில் நிற்கிறது. இதனால் அதே ஆடை வடிவமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.