சார்லி சாப்ளின் 2 படத்தின் கதைக்களம்2002 ஆம் ஆண்டு பிரபு தேவா, பிரபு, காயத்ரி ரகுராம், அபிராமி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படம் சார்லி சாப்ளின். தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷக்தி சிதம்பரம் உருவாக்கி வருகிறார். 

இந்நிலையில் அதன் கதைக்களம் பற்றி அவர் தெரிவித்துள்ளார். பிரபுதேவா , நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது, அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு போகும்போதும், அங்கு போய்ச் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே 'சார்லி சாப்ளின் 2'. 

2002 ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் படம் இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.