லட்சுமி ராய் நடிப்பில் ஜூலி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு



ஹிந்தியில் நேஹா துபியா,  பிரியன்ஸு சாட்டர்ஜி நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ஜூலி. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை இப்போது உருவாக்கிவருகின்றனர்.

ஜூலி 2 ல் நடிகை லட்சுமி ராய் நடிக்கிறார். இந்த படம் தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்த படத்தின் போஸ்டரில் நடிகை லட்சுமி ராய் கவர்ச்சியாக தோன்றியிருப்பார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு  அதிகமாகியுள்ளது