ஜூலி 2 படத்தின் காட்சிகள் லீக் ஆனது : ராய் லட்சுமி அதிர்ச்சி


ஹிந்தியில் நேஹா துபியா,  பிரியன்ஸு சாட்டர்ஜி நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ஜூலி. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை இப்போது உருவாக்கிவருகின்றனர்.

ஜூலி 2 ல் நடிகை லட்சுமி ராய் நடிக்கிறார். இந்த படம் தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் அந்த படத்தின் இடம் பெற்றிருக்கும் கவர்ச்சியான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக நடிகை லட்சுமி ராய் கூறியுள்ளார்.