சாமி 2 படத்திலிருந்து விலகியது ஏன் ? த்ரிஷா விளக்கம்


ஹரி இயக்கத்தில் விக்ரம் த்ரிஷா விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சாமி.  தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி.

இந்த படத்தில் நாயகியாக த்ரிஷாவுடன் கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென த்ரிஷா படத்திலிருந்து விலகினார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதற்கு த்ரிஷா சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் அவர், படத்தில் நடிக்க தொடங்குவதற்கு முன்பே விலகிக்கொள்ள அவருக்கு உரிமை உள்ளதாகவும். அவரது சொந்த காரணங்களுக்காகவே விலகி இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.