டிக்:டிக்:டிக் டீசர் 3 நாட்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை


ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படம் டிக்:டிக்:டிக். படத்தின் டீசர் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த டீசர் 3 நாட்களில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது .

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், ஆர்.ஜே.ரமேஷ் போன்றோர் நடிக்கின்றனர்.

சக்தி சௌந்தர்ராஜன் ஜெயம் ரவி இணையும் இரண்டாவது படம் இது. இவர்கள் இதற்கு முன்பு மிருதன் படத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .