மாணவி அனிதாவின் நினைவாக விஜய் சேதுபதி 50 லட்சம் நிதியுதவிஇதுவரை விளம்பர படங்களில் நடிக்காத விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்தார். அதன் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை மாணவி அனிதாவின் சொந்த ஊரான அறியலூருக்கு கொடுத்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது,

இதுவரை விளம்பர படங்களில் நடிக்காமல் இருந்தேன். இப்போது அணில் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருக்கிறேன். அதன் மூலம் கிடைத்திருக்கும் வருவாயில் ஒரு பகுதியை கல்வி உதவி தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளுக்கு தலா 5000 ரூபாயும், 10 பார்வையற்றோர் பள்ளிகளுக்கும் தலா 50,000 ரூபாயும்  , 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கும் தலா 50,000 ரூபாயும் ஹெலன் ஹெல்லர் என்ற பள்ளிக்கு 50000 ரூபாயும் சேர்த்து மொத்தம் 49,70,000 ரூபாய் தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன் . மருத்துவராக முடியாமல் உயிர் நீத்த மாணவி அனிதாவை நினைவாக இதை வழங்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.