விஜய் 62 விற்காக தெலுங்கு படத்திலிருந்து விலகினாரா ஏ.ஆர்.ரஹ்மான் ?



சமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் முருகதாசுடன் இணைய உள்ளார். ஏற்கனவே இவர்கள் இணைந்து கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாக இருந்த படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியுள்ளார். விஜய் படத்திற்கு இசையமைப்பதற்காகவே அவர் அதிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது.