80களின் பிரபலங்கள் ஒன்றிணைந்த விழா

1980-களில் தென்னக திரையுலக பிரபலங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி தங்களுடைய நட்பைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஒன்று கூடியுள்ளனர்.  

இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள விடுதியில் கூடினார்கள். கடந்த 17ஆம் தேதி அனைவரும் ஒன்று கூடினார்கள். அனைவரும் ஊதா நிற உடை அணிந்திருந்தார்கள்.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், ராதிகா, சுகாசினி, லிசி, குஷ்பு, பூர்ணிமா, பாக்கியராஜ் , ரேவதி மற்றும் பலரும் இதில் கலந்து கொண்டனர். 19ஆம் தேதி வரை நடந்த இந்த விழாவில் 28 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.