சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு



காமெடி நடிகரான சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படத்தில் வைபவி நாயகியாகவும் விவேக், ரோபோ சங்கர் வி.டி.வி கணேஷ் போன்றோர் நடிக்கும் இந்த படத்தை வி.டி.வி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தை டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார்.