மெர்சல் தெலுங்கில் லாபமா நஷ்டமா ? வெளிவந்த தகவல்விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய மெர்சல் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரு படத்தை பாராட்டினார்.  படத்திற்கு வந்த எதிர்ப்புகளும் படத்தின் வசூலை அதிகமாக்கின. 

படத்தின் வசூல் 250கோடி என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது மெர்சல் படத்தினால் 30 முதல் 40 கோடி வரை நஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மெர்சல் படத்தின் தெலுங்கு வசூல் விவரம் வெளிவந்துள்ளது. தெலுங்கில் மெர்சல் ரூ 10.05 கோடி வரை வசூல் செய்யதுள்ளது, விநியோகஸ்தர்களின்  பங்கு 5 கோடி ருபாய்  வரை கிடைத்துள்ளது.

இதனால் மெர்சல் தெலுங்கில் பெரிய அளவில் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என தெரியவந்துள்ளது.