தனுஷ் 'மேயாத மான்' பட இயக்குனர் இணையும் புதிய படம் ?


நடிகர்  தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை' படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து  `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மீதி படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தாகி இருக்கிறார். 

இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக `மேயாத மான்' இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருப்பதாகவும், அதற்கான  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.