தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். அனிருத் இசையமைக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதியை நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதி இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் செய்யப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் கார்த்திக்,'மெட்ராஸ்' கலையரசன்,நந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.