மெர்சல் படத்திற்காக அட்லீக்கு இன்னும் சம்பளம் தரவில்லையா ?



மெர்சல் படத்துக்காக அட்லீக்கு வர வேண்டிய சம்பளம் இன்னும் வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய மெர்சல் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரு படத்தை பாராட்டினார்.  படத்திற்கு வந்த எதிர்ப்புகளும் படத்தின் வசூலை அதிகமாக்கின. 

படத்தின் வசூல் 250கோடி என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது மெர்சல் படத்தினால் 30 முதல் 40 கோடி வரை நஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி படத்தின் டைரக்டர் அட்லீக்கு 5 கோடி ருபாய் சம்பளம் பாக்கி இருக்கிறதாம். அதை நடிகர் விஜய் வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்