குற்றவாளிகள் நாடாளக் கூடாது : யாரைக் கூறினார் கமல் ?


நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்திருந்தார். அவ்வப்போது அரசியல் குறித்த கருத்துக்களை ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது அவர் வழக்கம். இந்நிலையில் அவர் நேற்று ஒருகருத்தை வெளியிட்டிருந்தார். அதில் குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில்  சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான 187 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து முன்னாள் முதல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 

அரசாங்கமே திருடுவது குற்றம் தான் என்று கமல் ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற சோதனையை தான் என்பது இதிலிருந்து தெரிகிறது. இந்த ஆட்சி நடைபெற கூடாது என்ற அர்த்தத்தில் தான் அவர் கூறி இருக்கிறார் என்பது தெளிவாகிறது. அவரின் ட்விட்டர் பதிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.