நரகாசூரன் படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கம் படம் நரகாசுரன். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா நடிக்கின்றனர். துருவங்கள் பதினாறு படத்தைப் போன்று இந்தப் படத்தையும் ஊட்டியில் படமாக்குகிறார்.

செப்டம்பர் 15ம் தேதி தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது . சந்தீப் கிஷன் மற்றும் ஆத்மிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப் பட்டன. அதனை தொடர்ந்து அரவிந்த்சாமி சம்மந்தப் பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. 

இந்நிலையில் படத்தின் டீஸர் வரும் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 41 நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.