ரசிகரை அடித்தாரா கமல் : கமல் தரப்பு விளக்கம்


நடிகர் கமலஹாசன் ரசிகரை அடிப்பது போல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் இது போன்றதொரு வீடியோ பரவி வருவது கமலின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் கமல் தரப்பில் இருந்து அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும் அந்த ரசிகர் கமலின் காலில் விழுவதற்காக வந்தார், கமலுக்கு காலில் விழுவது பிடிக்காது பிடிக்காது என்பதால் அவரை தள்ளி மட்டுமே விடுவார் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.