விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்கெட்ச்'.  இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது இந்த படத்திற்கு டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தை பொங்கல் விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் ஜனவரி 12அம தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு. இறுதி கட்ட பணிகள் முடிவடையும் நிலையில் இருப்பதால் சாமி 2 மற்றும் துருவ நட்சத்திரம் பணிகளிலில் ஈடுபட உள்ளார் விக்ரம்.