சிம்புவும் தனுஷும் கலந்துகொள்ளும் இசைவெளியீட்டு விழா


காமெடி நடிகரான சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். அவர் தற்போது கதாநாயகனாக சக்க போடு போடு ராஜா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். 

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படத்தில் வைபவி நாயகியாகவும் விவேக், ரோபோ சங்கர் வி.டி.வி கணேஷ் போன்றோர் நடிக்கும் இந்த படத்தை வி.டி.வி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிம்புவும் தனுஷும் கலந்துகொள்ள போவதாக சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.