அஜித்தையும் மிரட்டியிருக்கிறார் அன்புசெழியன் : சுசீந்திரன் தகவல்


நான் கடவுள் படம் வெளிவந்த காலத்தில் நடிகர் அஜித்தும் அன்பு செழியனால் மிரட்ட பட்டிருக்கிறார் என்ற தகவலை இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் சசிகுமாரின் உறவினர் அன்புசெழியனால் மிரட்டப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பது:

அனைவருக்கும் வணக்கம், அசோக் அண்ணனின் மரணம் தமிழ் சினிமாவில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். அஜித் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துக் கொள்கிறேன். 'நான் கடவுள்' நேரத்தில் இந்த அன்பு செழியனால் அஜித் சாரும்  அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி சார், கவுதம் மேனன் சார், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேர், பல நடிகர்களும் இந்த அன்புசெழியனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் இசையமைப்பாளர் இமானிடமும் கூட எந்தப் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்று மறைமுகமாக சிரித்துக் கொண்டே கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இந்த அவலநிலைக்கு காரணமான அன்புசெழியன் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய அரசுக்கும், வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதிபணம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு செல்லவும்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.