தீரன் படத்தை இணையதளத்தில் பார்க்க என்ன வழி : ரசிகரின் கேள்விக்கு தயாரிப்பாளரின் பதில்சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படத்திற்கு காவல் துறையினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் படத்தின் தயாரிப்பாளர் பிரபுவிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். இணையதளத்தில் பணம் கொடுத்து இந்த படத்தை சப் டைட்டிலுடன் பார்க்கவேண்டும் என்றும் அவர் இருக்கும் இடத்தில் சப் டைட்டிலுடன் படம் வெளியாகவில்லை என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரபு, அமேசான் பிரைமில் வெளியாகும் வரை 25 நாட்கள் காத்திருங்கள் இல்லை என்றால் படத்தை திருட்டு தனமாக இணையத்தில் பார்த்துவிட்டு 10 டாலர் பணத்தை கஷ்டப்படுவோர்க்கு தானமாக கொடுங்கள்.

அவரின் இந்த பதிலுக்கு பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.