சூர்யாவிற்கு கடும் போட்டி கார்த்தி தான் : காவல்துறை உயர் அதிகாரிகார்த்தி நடிப்பில் 'சதுரங்க வேட்டை ' வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காவல் துறையினர் பலரும் அந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.  இந்நிலையில் சென்னை காவல் துணை ஆணையர் கார்த்தியையும் படத்தையும் பாராட்டியுள்ளார்.

சிங்கம் படத்தின் போலீஸ் கதாபாத்திரத்தில் பொருத்தமாக நடித்திருப்பார் சூர்யா. போலீஸ் என்றாலே சூர்யா நினைவுக்கு வரும் அளவிற்கு நடித்திருப்பார். ஆனால் அவருக்கே போட்டியாக கார்த்தி இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக அவர் பாராட்டி இருக்கிறார்.

1995 முதல் 2005 வரை தமிழ் நாட்டில் நடந்த கொள்ளை சம்பவங்களின் குற்றவாளிகளை கண்டுபிடித்த உண்மை கதையே இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.