அரசியலில் இறங்க அவசரம் இல்லை : ரஜினிகாந்த்ரஜினிகாந்த் கடந்த செப்டெம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் போர் வரும் பொது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார். அதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவது உறுதியானது.

அனால் அவர் எப்போது வருவார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. அவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி அதை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினி, காலத்தில் இறங்க வேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று கூறினார்.

தனது பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி ரசிகர்களை சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.