கிரிக்கெட் வீரர் அஷ்வின் உலக சாதனை


இந்திய சூழல் பந்து வீச்சாளர் அஷ்வின் குறைந்த போட்டிகளில் 300 விக்கெட் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கையுடன் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதன் மூலம் மிகவும் குறைந்த போட்டிகளில் (54 போட்டிகள் ) அஷ்வின் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லியின் சாதனையை முறியடித்துள்ளார். அவர் 56 போட்டிகளில் 300 விக்கெட் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது..