நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சூர்யா ஜோதிகா


மலையாள நடிகர் நிவின் பாலியின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் வருகை தந்துள்ளனர். இதன் புகைப்படங்களை நிவின் பாலி தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிவின் பாலி தற்போது காயகுளம் கொச்சுண்ணி என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவும் ஜோதிகாவும் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று வெளியிட்டுள்ளனர். 

படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற சூர்யா ஜோதிகாவை படக்குழுவினர் கேக் வெட்டி வரவேற்றனர். நிவின் பாலி தமிழில் நடித்துள்ள ரிச்சி படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.