அன்புச்செழியனை கடுமையாக தண்டிக்க வேண்டும் : விஷால் காட்டம்


இயக்குனர் சசிகுமாரின் உறவினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அன்புசெழியன் தான் என்பதையும் விவரமாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அன்புசெழியனுக்கு எதிராக பலரும் கருத்து கூறிவந்தனர். அவரால் அஜித் உட்பட பலரும் பாதிக்கப்டடிருப்பது தெரிய வந்தது. 

இந்நிலையில் அசோக்குமாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், அன்புசெழியனுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று கோபமாக தெரிவித்தார்.