வேலைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சிவகார்த்திகேயன் நடிப்பில் 'ஜெயம்' ராஜா இயக்கி வரும் படம் வேலைக்காரன். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், மலையாள நடிகர் பகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் முக்கிய படப்பிடிப்பை முடித்து விட்டு சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கம் படத்தில் பிஸி ஆகிவிட்டார்.

இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு. இறுதி கட்ட படப்பிடிப்பில் சிவா மற்றும் ஆர்.ஜெ.பாலாஜி நடிக்கும் காட்சிகளும் இறைவா பாடலும் படமாக்கப் பட்டன. 

டிசம்பர் 22 அம தேதி படத்தை வெளியிட உள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 'ஜெயம்' ராஜா இயக்கத்தில் வெளிவந்த 'தனிஒருவன்' படம் மாபெரும் வெற்றியடைந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது