தமிழ் சினிமாவில் நிவின் பாலிக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா ?நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவின் பாலி. இருப்பினும் ப்ரேமம் படம் அவரை தமிழ் ரசிகர்களிடையே பிரபலப்படுத்தியது.

அவர் தற்போது தமிழில் நடித்துள்ள படம் ரிச்சி. அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அவரிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டதற்கு அவர், எப்பவுமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்றும் பிடித்த படம் தளபதி என்றும் கூறியுள்ளார்.

அவர் நடித்துள்ள ரிச்சி படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.