நெஞ்சில் துணிவிருந்தால் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி வெளியானது.

விமர்சகர்கள், மக்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு 'நெஞ்சில் துணிவிருந்தால்' படக்குழு, நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக நீக்கியது.

இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி (நாளை) முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' திரையிடல் நிறுத்தப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இது குறித்து படத்தின் இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

இந்த படத்தை பார்த்தவர்களுக்கும் விமர்சித்தவர்களுக்கும் நன்றி. சில காரணங்களால் படம் திரையரங்குகளில் இருந்து நீக்கப் படுகிறது. மீண்டும் டிசம்பர் 15 முதல் மறு வெளியீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.