அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார் : நடிகர் ஆரி பேச்சு


ஜல்லிக்கட்டு  போராட்டத்தின் பொது அதில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் நடிகர் ஆரி. இந்நிலையில் விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆரி அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று கூறியுள்ளார்.

நடிகர் அஜித் அரசியலில் ஈடுபாடு இல்லாதவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தனது ரசிகர்களை தன் சுயநலத்துக்காக பயன்படுத்தாதவர் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதனாலேயே அவர் தனது ரசிகர் மன்றங்களை களைத்து விட்டார்.

இந்நிலையில் நடிகர் ஆரி இவ்வாறு பேசியிருப்பது அஜித் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிறி படம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களைப் பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.