அனுஷ்கா நடித்த பாகமதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


அனுஷ்கா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாகுபலி. இரண்டு பாகங்களாக வெளிவந்த பாகுபலி மாபெரும் வசூல் சாதனை செய்தது. அதையடுத்து அனுஷ்கா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் பாகமதி.

பாகமதி படத்தில் ஈரம் படத்தில் நடித்த ஆதி மலையாள நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஆஷா சரத் ஆகியோர் நடிக்கின்றனர். திரில்லர் படமாக தயாராகி வரும் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்யதாக அறிவித்துள்ளது படக்குழு.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அசோக் இயக்குகிறார்.