மீண்டும் எழில் படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்


எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால்,நிக்கி கல்ராணி, ரோபோ ஷங்கர் சூரி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது மீண்டும் விஷ்ணு விஷால் மீண்டும் எழில் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.

ஈசன் புரொடக்க்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். நிவேதா பெத்துராஜ்,யோகி பாபு,மற்றும் பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். 

இதன் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.