விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா படத்தின் மற்றோரு நாயகி


விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கும் படம் ஜூங்கா. காஷ்மோரா படத்திற்கு பிறகு கோகுல் இயக்கும் இந்த படத்தை விஜய் சேதுபதி சொந்தமாக தயாரிக்கிறார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு இவர்கள் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சயீஷா நடிக்கிறார். இந்நிலையில் படத்திற்கு இரண்டாவது நாயகியாக நேகா சர்மா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களைத் தவிர இந்த படத்தில் யோகி பாபு மற்றும் பிரியா பவானிஷங்கர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.