சாய் பல்லவி நடிக்கும் 'கரு' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


வனமகன் படத்தை தொடர்ந்து ஏ.எல்..விஜய் இயக்கம் படம் கரு. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரேமம் புகழ் சாய் பல்லவி நடிக்கிறார். 

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்  உருவாகிறது.  இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக சாய் பல்லவி நடிக்கிறார்.இந்த படம் பெண் சிசுக் கொலை பற்றிய விழிப்புணர்வு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நாளை (18ம் தேதி ) வெளியிடையுள்ளதாக லைக்கா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. சாய் பல்லவி தமிழில் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.