'இரும்பு திரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு



'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' மற்றும் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நடிகர் விஷாலே தயாரிக்கிறார். இந்நிலையில்  'இரும்புத்திரை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.



மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப் பட்டுவிட்ட நிலையில் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் மீதம் உள்ளது. அதை விரைவில் முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.