பைனான்சியர் அன்பு செழியனுக்கு ஆதரவாக இயக்குனர் சீனு ராமசாமி கருத்தால் சர்ச்சைஇயக்குனர் சசிகுமாரின் உறவினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அன்புசெழியன் தான் என்பதையும் விவரமாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அன்புசெழியனுக்கு எதிராக பலரும் கருத்து கூறிவந்தனர். அவரால் அஜித் உட்பட பலரும் பாதிக்கப்டடிருப்பது தெரிய வந்தது. 

தற்போது இயக்குனர் சீனு ராமசாமி அன்புசெழியணனுக்கு ஆதரவாக ஒரு கருத்தை கூறியிருக்கிறார். அதில் அன்புசெழியன் உத்தமர் எனவும், அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த கருத்து திரை துறையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சீனு ராமசாமி தான் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.