மீண்டும் தொடங்கவிருக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா'


கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்பின் போதே எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பிறகு கெளதம் மேனன் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் பிசி ஆகிவிட்டார். தனுஷ் வடசென்னை படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

தற்போது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். டிசெம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.