கந்துவட்டி கொடுமையால் சசிகுமாரின் மேனஜர் தற்கொலை


சசிகுமாரின்  தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்த அவரது உறவினர் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை கொண்டுள்ளார். இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் கம்பெனி பிரோடக்ஷன்ஸ் நிறுவனத்தை கவனித்து வந்தவர் அவரின் உறவினர் அசோக் குமார்.

அசோக் நேற்று தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடன் கொடுத்தவர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் அசோக் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் அன்பு செழியன் என்பவரிடம் வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி கட்டி விட்டதாகவும், இருப்பினும் அவர் மிரட்டுவதாகவும், குடும்பத்தை தூக்கி விடுவேன் என்றும் மிரட்டுவதால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.