கெளதம் கார்த்திக் நடிக்கும் மிஸ்டர் சந்திரமவுலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது



இயக்குனர் திரு இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

கெளதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா, மாஸ்டர் மகேந்திரன், வரலட்சுமி, சதிஷ் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சி.எஸ் சாம் இசையமைக்கிறார் 

தனஞ்செயன் இந்த படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் திரு, தீராத விளையாட்டு பிள்ளை, சமர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.