கந்து வட்டி கொடுமையை தடுத்தாக வேண்டும் : கமலஹாசன்


கந்துவட்டி கொடுமையால் சசிகுமாரின் உறவினர் தற்கொலை சேர்த்து கொண்டதை அடுத்து திரை துறையை சேர்ந்த பலரும் கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் கந்துவட்டி கொடுமையை தடுத்ததாக வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். 
அதில் அவர் கூறியிருப்பதாவது:

'கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.'

என்று குறிப்பிட்டிருக்கிறார்.