நாச்சியார் டீசரில் ஜோதிகா பேசிய வசனத்தால் சர்ச்சை

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நாச்சியார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். வரும் டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். டீசரை பார்த்த பலரும் பாராட்டினர். ஒரு சிலர் டீசரின் இறுதியில் ஜோதிகா பேசியிருக்கும் வசனத்திற்கு எதிப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர் பெண் எப்படி இது போன்ற வசனம் பேசலாம் என்றும், ஒரு சிலர் ஆண் மட்டும் பெண்கள் பேச கூடாத என்றும், ஒரு சிலர் பாலா படம் இப்படி தான் இருக்கும் என்றும் விமர்சனம் செய்கின்றனர்.